Photobucket

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

தமிழ்ப் பழமொழிகள் அகத்தினழகு முகத்தில் தெரியும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். அடியாத மாடு படியாது. அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர். அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன. அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள். ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம். ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும். ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை. ஆழம் தெரியாமல் காலை விடாதே. ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு. ஆனைக்கும் அடிசறுக்கும். இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான். இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம். எறும்பூரக் கல்லும் தேயும். ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல். கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும். கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல. கழுதை அறியுமா கற்பூர வாசனை? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல். காகம் திட்டி மாடு சாகாது. காய்த்த மரம்தான் கல்லடிபடும். காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம். குரைக்கிற நாய் கடிக்காது. கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு. கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல். கோழி மிதித்துக் குஞ்சு சாகாது. கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம். சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல. சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல். சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது. சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம். சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்? தடியெடுத்தவன் தண்டக்காரன். தம்பியுள்ளான் படைக்கஞ்சான். தன் வினை தன்னைச் சுடும். தனிமரம் தோப்பாகாது. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை. தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன. தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான். தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல். நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை. நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல். நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். நிறைகுடம் தளம்பாது. பசி வந்தால் பத்தும் பறந்திடும். படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். பந்திக்கு முந்து படைக்குப் பிந்து. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. பனை மரத்தடியில் பால் குடித்தது போல. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார். பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல். புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான். புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும். பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல. முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. விரலுக்குத் தக்கதே வீக்கம். விளையும் பயிரை முளையிலே தெரியும். வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். வெளுத்ததெல்லாம் பாலல்ல. வேலிக்கு ஓணான் சாட்சி. வைக்கோற் போர் நாய் போல. Source : http://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகள்